ஒருப் பயணம் நமக்கு எதெல்லாம் கற்றுக் கொடுக்கிறது.எதிர்பாராத எதிர்பார்ப்புடன் தொடங்குகின்ற பயணம் எப்படியான அனுபவங்களை நமக்குள் பதிந்துவிடுகிறது.ஒரு நொடியில் நம்மை ஊமையாக்கிவிடும் சாலையோர கண்ணீராகட்டும்,பறந்து போகிற சொகுசு காரில் மிதந்து வரும் சந்தோசமாகட்டும்,பஞ்சரான காரின் பின் இருக்கை குழந்தையின் புன்னகயாகட்டும் எல்லாமே ஏதோ ஒன்றை நமக்கு கற்று கொடுத்துவிட்டு தான் கடந்து போகின்றன.அப்படியொரு அனுபவத்தை எங்களுக்குள் புதைத்து விட்டுப் போன பயணம் பற்றிய பதிவு தான் இந்த பக்கம்.......
எதையோ தேடித் போன பயணத்தில் எது எதையோ கண்டுபிடிக்க முடிந்தது.மலைவாழ் மக்கள் தொலைத்தவற்றை கண்டறிய முடிந்ததே தவிர எதையும் மீட்க முடியவில்லை.நகரத்தார் மாறிவிட்டார்கள் என்பதும் அவர்கள் கிராம மக்களை மாற்றி விட எவ்வளவு தூபம் போடுகிறார்கள் என்பதும் எங்களுக்கு தெளிவாக புரிந்தது." என்ன இல்லை இங்கு" என்ற தோணியில் தேடிய எங்கள் பயணத்தில் "எதிர்பார்த்தது இல்லை அங்கு" என்பது தெளிவாக புரிந்தது.பள்ளிக்கூடம் இல்லாத கிராமங்கள்,ஆசிரியர் இல்லாத பள்ளிகூடங்கள்,கனவுகள் இல்லாத அவர்களின் இரவுகள்,ஆறு மாத கர்ப்பிணி பெண்ணின் வேலி தாண்டும் பரிதாபம்,கீறிப் பிள்ளையை உணவாகத் தர வந்த உபசரிப்பு,வழிகாட்டிய பிள்ளைகள்,எங்களை தீர்க்கதரிசியாகப் பார்த்த தலைவர்கள்,கிராம் கணக்கே எடை கொண்ட குழந்தைகள்,மனவளர்ச்சி இல்லாத ஹேமலதா,ஜிம்னாஸ்டிக் பாரதி,,பட்டாம் பூச்சியோடு விளையாடிய சந்தியா,பெயரைத் தவிர வேறு எதுவும் தெரியாத வினோத்,தேவிக்கு நாற்று நடக் கற்றுகொடுத்த வெண்மணி அக்கா,லாவண்யாவுக்கு நண்பனாய் மாறிப் போன சிவா,சுந்தரிடம் மல்லு கட்டிய குடிகார வெள்ளந்தி மனிதர்,பேனா கொடுத்த தாத்தா,எனக்கு முடி வெட்டி விட்ட சங்கர் அண்ணா,எங்கள் மூவரையும் யோசிக்க வைத்த மணிமேகலை பாப்பா,உங்களுக்கு கொடுக்க எதுவும் இல்லை என சொல்லிய சரிதா அக்கா........
எத்தனை எத்தனை மனிதர்கள்,எப்படி எப்படியான வாழ்க்கை, எவ்வளவு கஷ்டங்கள்,அங்கு உணர்ந்த விஷயங்களை என் மூளையின் இணையதள பதிப்பில் பதிவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல,அழ வைத்த நிமிடங்களாகட்டும்,சிரித்துவந்த நொடிகளாகட்டும்,யோசிக்க வைத்த கணங்களாகட்டும் எல்லாமே சின்ன சின்ன விஷயங்கள் தான் ஆனால் அந்த மனிதர்கள் சின்ன விஷயம் அல்ல!!! அவர்கள் உயரத்தில் இருக்கிறார்களே தவிர இன்னும் வளரவில்லை என்பது எவ்வளவு வருத்தமாய் இருக்கிறதோ,அவ்வளவு சந்தோசமாய் இருக்கிறது அவர்கள் இன்னும் மாறாமல் இருப்பது.நாங்கள் கண்டு வந்த மிகப் பெரிய உண்மை "அவர்கள் யாருமே முகமூடி அணியவில்லை" என்பது தான், எல்லோருமே மூடி இல்லாத முகங்களாகவே இருக்கிறார்கள், இனியும் இருப்பார்கள்.மிருகங்கள் அங்கு சென்று குடியேறாத வரை......

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக