மேரி கெல்வின்.
மேரி கெல்வினின் இடது கண்ணை இலங்கை பறித்தது. அவரது உயிரையே காவு வாங்கிவிட்டது சிரியா. எங்கெல்லாம் அரசப் படைகளின் தாக்குதலில் அப்பாவிகளின் அபயக்குரல் கேட்கிறதோ ... அங்கெல்லாம் தனது இருப்பைப் பதிவு செய்த பத்திரிக்கையாளர் மேரி கெல்வின் கடந்த 23 ஆம் தேதி கொல்லப்பட்டுவிட்டார்.
"2001ஆம் ஆண்டு வன்னியில் 5 லட்சம் தமிழரின் அவல நிலையை அறிந்து கொள்ள புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் நான் நுழைந்தேன். அங்கு செல்வதற்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்து இருந்தது. ஸ்ரீலங்கா படைகளின் கண்ணில் படாமல் வெளியேறி விட வேண்டுமென்று நான் நினைத்தேன். சிறு விளக்குகளின் ஒளி, முட்கம்பி வேலிகள், இடுப்பளவு தண்ணீர் ஊடான காட்டுப் பாதையில் நான் பயணித்தேன். ஆனாலும், படையின் கண்ணில் பட்டேன். என்னை பார்த்ததும் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். வெளிச்ச குண்டுகளை வீசினர். நான் பத்திரிக்கையாளர் என்று கத்தினேன்.அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை. அப்போது, கிரனைட் வைத்து தாக்கினார்கள்.அந்த ரத்த காயத்துடன் முன்னே நடந்து வந்தேன்.நிற்க முடியவில்லை.ரத்தம் வழிந்து கொண்டே இருந்தது.அப்போது என் எதிரில் வந்த படையினர் பலமாகத் தாக்க தொடங்கினார்கள்.என் உடைகளை கிழித்து நிர்வாணம் ஆக்கினார்கள்.நான் மூச்சு விடக் கஷ்டப்பட்டு கொண்டும்,தலையில் கண்ணில் காயத்துடனும் நெஞ்சில் வெடி காயத்துடனும் இருந்தேன்.அப்படியே தூக்கி கனரக வாகனத்தில் வீசினார்கள்.அந்த மக்கள் பட்ட கஷ்டத்தை விட நான் பட்ட துன்பம் ஒன்றும் இல்லை என்றாலும் எனது அனுபவம் தமிழர்களின் வேதனையை சொல்ல போதுமானது" என்று,உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தவர் மேரி கெல்வின்.
எங்கோ பிறந்து யாருக்காகவோ உழைத்து, எங்கோ இறந்து போன கெல்வின் வாழ்க்கை,நம் அனைவருக்குமான தூண்டுதல்.
நன்றி ஜூனியர் விகடன் 04 /03 /2012

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக