"உன்னை நேசிப்பதை போல உன் அயலாரையும் நேசி" "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் இருக்கும்" "யாதும் ஊரே யாவரும் கேளிர்"
எப்படியான வாக்கியங்கள் இவை.உங்கள் பக்கத்து வீட்டுக்காரரிடம் உள்ள உறவை ஒரு நொடி நினைத்துப் பார்த்துவிட்டு இதை படியுங்கள்.அவரிடம் எத்தனைமுறை பேசி இருப்பீர்கள்,உங்கள் சுக துக்கங்களை அவர்களிடம் நீங்கள் பகிர்ந்திருப்பீர்களா? நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் இவர்தான் பக்கத்து வீட்டுக்காரர் என்று.
சென்னை வளர்ந்த நகரம் என்பது நமக்குத் தெரியும், அது நமது நாகரீகத்தை மறந்து வளர்ந்திருக்கிறது என்பது எவ்வளவு பெரிய கொடுமை.அசோக் நகரில் இருக்கும் ஒரு நண்பரின் வீட்டுக்கு சென்ற போது கேட்டேன் பக்கத்து வீட்டில் எத்தனைப் பேர் இருக்கிறார்கள் என்று,நான்கைந்து பேர் இருப்பார்கள் என்றார்,எப்படி சொல்கிறீர்கள் என்று கேட்ட போது அவர் சொன்னார், வெளியில் கிடக்கும் செருப்புகளின் எண்ணிக்கையை வைத்து தான் என்று.இப்படியான பதிலை நான் எதிர்ப்பார்க்கவில்லை.ஆனால் சென்னை நகர வாழ்க்கை இப்படி தான் இருக்கிறது என்பதை நம்மால் மறுக்கமுடியுமா? நாம் அத்தி பூத்தார்ப் போல அண்டை வீட்டாரிடம் பேசுகின்ற வார்த்தைகள் "நாங்க ஊருக்கு போறோம்,வீட்டை பார்த்துகங்க" என்பது தான்.எவ்வளவு ஆழமான வார்த்தைகள் என்பதை பாருங்கள்.இப்படியான உறவுகள் வீட்டை வேண்டுமானால் பார்த்துகொள்ளும்,நம்மை எப்படி பார்த்துகொள்ளும்.பக்கத்து வீட்டில் எது நடந்தாலும் நமக்கு கவலை இல்லை,பிறகு நம் வீட்டில் ஏதாவது நடந்தால் அவர்கள் எப்படி பார்த்துகொள்வார்கள்.ஒரு கதை சொல்வார்கள் ""என் பக்கத்து வீட்டுக்காரனை ஒருவன் அடித்தான் நான் போய் கேட்கவில்லை,என் எதிர் வீட்டுக்காரனையும் அடித்தான் நான் போய் கேட்கவில்லை,கடைசியில் என்னையும் அடித்தான் கேட்க யாருமே இல்லை" என்று.இப்படியான வாழ்க்கையை நான் இங்கு தான் பார்க்கிறேன்.எங்கள் ஊரில் இப்படியான ஒரு வீட்டையும் நான் பார்த்ததில்லை.என் பக்கத்துக்கு வீட்டுக்காரருடன் அப்பா ஆயிரம் சண்டைகள் போட்டாலும் அவருக்கு ஒன்று என்றால் அப்பா முன்னிலையில் இருப்பார்,எங்கள் வீட்டில் ஒரு விஷேசம் என்றால் பக்கத்து வீட்டுக்காரர் முதல் ஆளாக வந்து நிற்பார்.என் அப்பா போன்ற மனிதர்களையோ,என் பக்கத்து வீட்டுக்காரர் போன்ற மனிதர்களையோ நான் இது வரை இங்கு சந்தித்தது இல்லை.அப்படியான உறவு இங்கு இருப்பவர்களுக்குத் தேவையில்லையா? பக்கத்து வீட்டுக்காரருடன் நம்மால் பழக முடியவில்லை என்றால் எங்கிருந்தோ வரும் சக ஊழியருடன் எப்படி பழக முடியும்! ஒரு சாதாரண புன்னகை உங்கள் குடும்பத்திற்கு பக்கத்து வீட்டுக்காரரிடம் காப்பீட்டை பெற்று தரும்.பக்கத்து வீட்டு மனிதர்களிடம் பழகிப் பாருங்கள் எப்படியான சந்தோசத்தை நீங்கள் தவறவிட்டு இருக்கிறீர்கள் என்பதுப் புரியும்.
நடைப்பயணம் தொடரும்.... (தொலைத்தவைகளைத் தேடி)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக