நான் போகிற போக்கில் எதையாவது சொல்லிவிட்டு போகிறவன் இல்லை.அப்படியான மனநிலையில் இது வரை நான் எழுதியது இல்லை என நம்புகிறேன்.என்னை வசைப் பாட வேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்காது எனவும் நம்புகிறேன்.காரணம் நான் எழுத்தாளன் இல்லை.அப்படி இது வரை நான் கூறியதும் இல்லை.நான் சிரிக்க சிரிக்க கதை பேசுபவன் இல்லை,சேர்ந்து சிரிக்க ஒரு துணை இல்லையே என அழுதவன்.நான் இழந்த அல்லது இல்லாத ஒன்றை உருவகப்படுத்தி சொல்வேனே தவிர யாரையும் உருவம் படுத்தி சொல்லமாட்டேன்."என்னால் காயப்பட்டவர்கள் அதிகம்,என்னைக் காயப்படுத்தியவர்கள் மிக அதிகம்."அவை எல்லாமே சந்தர்ப்பங்கள் மட்டும் தான், திட்டமிடல் இல்லை என்பதை நான் அறிவேன்,உங்களுக்கும் தெரியப்படுத்துகிறேன்.நீங்கள் எனக்காக எந்த ஆலமரதுக்கும் சாட்சி சொல்ல வர போவதில்லை,நானும் உங்களுக்காக தீர்ப்பு சொல்ல எந்த நீதிமன்றத்திற்க்கும் வரப்போவதில்லை.அப்படி இருக்க எதற்காக இப்படி ஒரு வாதம்.நான் தோல்வியடைவது முதல் முறை என்றால் உங்கள் காலில் விழுந்து கதறலாம்.தோற்றுக்கொண்டே இருப்பவன் அத்தகைய செயலில் இறங்குவேன் என எப்படி நீங்கள் எதிர்பார்க்கலாம்,என் அப்பா எனக்கு தோல்வியைப் பற்றி சொல்லிக் கொடுத்தாரே தவிர வெற்றியைப் பற்றி சொல்லிகொடுத்தது இல்லை.காரணம் வெற்றியைப் பற்றி நான் தான் என் அப்பாவுக்கு சொல்லிதர வேண்டும் என்பதால்.உங்களது அலட்சியமான பதில்கள் என்னை கஷ்டப்படுத்துமே தவிர அது எந்த வகையிலும் என்னைக் காயப்படுத்தாது.பணிவு,மரியாதை,இவை அனைத்தையும் நீங்கள் பள்ளிப்படிப்பை தாண்டும் முன்பாக மறந்துவிட்டீர்கள் என்பதை உங்கள் அறிவு நூலகம் எனக்கு சொல்லி கொடுத்து விட்டது.ஆத்திச் சூடி தலைப்பு மட்டுமே நினைவிருக்கும் உங்களுக்கு எங்கே "அறம் செய்ய விரும்பு""ஆறுவது சினம்" நினைவிருக்கப் போகிறது.நினைவுகளோடு அழுது புலம்பி இருக்கிறேன்,அது ஒரு வரம் என்பதால்,என்னை நிழல்களோடு அழவைத்து விடாதீர்கள்,அவை ஒரு வகை சாபம் என்பதை நான் படித்திருக்கிறேன்.உங்களுக்குத் தெரியுமா,என் அப்பாவிற்கு என் அக்காவை பிடிக்கும்,என் அக்காவிற்கோ என் அம்மாவை பிடிக்கும்,என் வீட்டில் உள்ள எல்லோருக்குமே என்னை பிடிக்கும்,எனக்கோ எழுத்தாளர்களான உங்களைத் தான் பிடிக்கிறது.நீங்கள் ஆடி ஓடி விளையாடிய இடத்தில் நான் தற்போது தான் நுழைவு சீட்டிற்கு விண்ணப்பம் செய்திருக்கிறேன்.நீங்கள் வளர்த்து விடுவீர்கள் என்ற நம்பிக்கையில் தான் வந்துவிட்டேன். உங்களின் வரவேற்ப்பு தலை வாசலில் வேண்டாம்,குப்பைகள் நிறைந்திருக்கும் பின் வாசலாக இருந்தால் அதுவே எனக்குப் போதுமானது.
"விழித்திருந்து இதை எழுதியது நானல்ல,என் நிழல் என்பதை சொல்லிவிட்டு நான் கிளம்ப தயாராகிறேன்."
நடைப் பயணம் தொடரும்....
"விழித்திருந்து இதை எழுதியது நானல்ல,என் நிழல் என்பதை சொல்லிவிட்டு நான் கிளம்ப தயாராகிறேன்."
நடைப் பயணம் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக