நம்மை திரும்பிப் பார்க்க வைத்தவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் திரும்பி படுத்திருந்தவர்கள் தான்.முள் மீதும் கல் மீதும் விழுந்து காயப்படாதவன் பூக்களைப் பார்ப்பதற்கு கூட தகுதி இல்லாதவன்.உழைக்க உன்னால் முடியும் என்றால் பிழைக்க ஆயிரம் வழிகள்.நடக்கத் தெரியாதவன் தான் பாதையைப் பற்றி கவலை பட வேண்டும்.உனக்கென்ன நீ பறக்க தெரிந்தவன்!நீ பறக்க வேண்டியப் பாதையை ஊர் வந்தா சொல்லவேண்டும்.உன் பெயருக்காக எத்தனையோ பலகைகள் தயாராய் இருக்கின்றன.குடும்ப அட்டையில் மட்டும் இருக்க வேண்டிய பெயரா உனது.உண்பதும் உறங்குவதும் மட்டும் தான் உன் வேலை என்றால் வெட்கப் பட போகிறார்கள் உனக்கு பெயர் வைத்தவர்கள். உன்னை ஏதாவது ஒரு மேடையில் சந்திக்க காத்திருக்கிறார்கள் சாதனையாளர்கள்.புறப்பட்டு விட்டாய் என நினைக்கிறேன்.நீயும் சாதனையாளர் தான்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக