நான்கு மணி நேர ரயில் பயணத்தில் யாரும் சிரிப்பதாய் இல்லை.எல்லோரும் ஏதோ கடவு அட்டைக்கு புகைப் படம் எடுக்க வந்தவர்கள் போலவே இருக்கிறார்கள்.சென்னை வாசிகளும் மனிதர்கள் தான் என்பதை கழுத்தில் மாட்டி இருக்கும் அடையாள அட்டை மட்டுமே சொல்கிறது.பெயருக்கு ஒரு புண்முறுவல் கூட இல்லை.என் பக்கத்தில் இருந்த சகப் பயணியிடம் இதைப் பற்றி கேட்டேன்,அவருக்கு யார் மேல் என்ன கோபமோ அந்த கோபம் முழுவதையும் என் பக்கம் திருப்பி விட்டார்.இப்படியான கேள்விகள் எங்கள் ஊரில் இதுவரை யாரிடமும் நான் கேட்டதில்லை.பரம எதிரியான பாபு மாமா கூட எங்கேனும் பார்த்துவிட்டால் கொஞ்சமாய் சிரித்து விட்டு போவார்.அப்படியான மனிதரிடம் ஏன் என் குடும்பத்தார் பேசுவதில்லை என யோசித்து கொண்டே வீடு வருவேன்.பிறகு தான் தெரிந்தது மாமா யாரைப் பார்த்தாலும் அப்படித் தான் சிரித்து வைப்பார் என்று.அப்படியான ஒரு மனிதரை கூட இது வரை நான் சென்னையில் சந்தித்தது இல்லை.பேருந்து நடத்துனரின் கோபப் பார்வைக்கு பயந்து ஒரு ரூபாய் மீதியை கேட்காமல் விட்ட சம்பவங்கள் இங்கு எனக்கு அதிகம்.அண்ணா சாப்பாட்டு பார்சலில் மோர் இல்லை என்றால்,கடைக்காரர் பார்க்கும் பார்வைக்கு பதில் சொல்ல முடியாமல் விழி பிதுங்கி நின்ற அனுபவமும் எனக்கு உண்டு.ஒரு சிறிய புன்னகையில் எல்லாம் சரி ஆகி விடும் என்ற வார்த்தையை மதித்து,இங்கு கொஞ்சம் சிரித்துவிட்டால் அடிப்பதர்க்கே ஆள் வைத்திருக்கிறார்கள் சில நல்லவர்கள். கொஞ்சம் சிரித்தால் அப்படி எதை இழந்து விட போகிறார்கள் சென்னை வாசிகள்.ஒரு அடுக்கு மாடியில் குடியிருக்கும் எனக்கு தெரிந்த மனிதருக்கு,அந்த கட்டிட தாழ்தலத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் தெரிந்த அளவுக்கு அந்த வாகனத்தின் உரிமையாளரை தெரியவில்லை என சொல்லும் போது என் மக்கள் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள் என்பது புரியவில்லை.முகபுத்தகத்தில் முகம் தெரியாத ஒருவரிடம் ஏமாந்து போன ஒரு பெண்ணின் கதையை சமீபத்தில் தொலைகாட்சியில் பார்க்க நேரிட்டது,தன் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள அந்த பெண்ணுக்கு அப்படியான யாரும் தன் பக்கத்து வீட்டில் இல்லையா? இல்லை அவளது வீட்டில் இல்லையா? முகம் தெரியாத யாரோ ஒருவருக்கு வழங்க படுகிற நேரத்தில் பாதி நேரம் கூட நன்கு தெரிந்த, நம் வீட்டில் இருப்பவர்களுக்கு அந்த பெண்ணை போன்றவர்கள் வழங்காதது ஏன்? கொஞ்சம் யோசித்து பாருங்கள்,எல்லாத் தவறும் நம்மிடமும்,நம் சமூகத்திடமும் தான் இருக்கிறது.தினமும் பார்க்கின்ற முகம் தான் என நினைத்து சில நல்ல மனிதர்கள் அலட்சியப்படுத்துவதும்,பத்து நிமிடம் சிரித்து பேச நேரம் இல்லாததும் தான் அந்த பெண்ணை இந்த இடத்திற்கு அழைத்து வந்திருக்கிறது. சிரிப்பதற்காக மட்டுமே சமுக வலைத்தளத்திற்கு வருகிறவர்கள் நம்மில் அனேகர்.நான் பார்த்திருக்கிறேன் சமுகத்தை பற்றியோ,நம் இனத்தை பற்றியோ பேசுவதற்கு இங்கு யாரும் வருவதில்லை.முக புத்தகத்தில் அரட்டை அடிப்பதற்கும்,வீணான கதைகள் பேசுவதற்கு மட்டுமே மிக அதிக பக்கங்கள் உள்ளன.அதில் தான் அதிக முகம் தெரியாத மக்களும் இருக்கின்றனர்.அப்படியான மக்கள் அங்கே சிரித்து பேச வருகிறார்கள் என்றால், அவர்களின் பக்கத்துவீட்டில் இருப்பவர்களோ,பக்கத்தில் இருப்பவர்களோ அவர்களோடு சேர்ந்து சிரித்துபேச தயாராய் இல்லை
என்று தானே பொருள்.இப்படியான வாழ்க்கை இன்று சாதாரணமாக தெரியலாம் ஆனால் நாளை? இது இப்படியே தொடருமானால்,நாளை உதவி செய்வது மனிதாபிமானம் என்பதைப் போல, சிரிப்பதும் மனிதாபிமானம் என்ற பட்டியலில் இடம் பெற்றாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை."நாம் சோகமாய் இருந்தால் சிரிக்க முயற்சிப்போம்.பிறர் சோகமாய் இருந்தால் சிரிக்க வைக்க முயற்சிப்போம்." (நான் எழுத பழகுகிறேன்,பிழை இருந்தால் சிரித்துவிட்டு சொல்லுங்கள்.நான் திருத்திகொள்கிறேன்)
என்று தானே பொருள்.இப்படியான வாழ்க்கை இன்று சாதாரணமாக தெரியலாம் ஆனால் நாளை? இது இப்படியே தொடருமானால்,நாளை உதவி செய்வது மனிதாபிமானம் என்பதைப் போல, சிரிப்பதும் மனிதாபிமானம் என்ற பட்டியலில் இடம் பெற்றாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை."நாம் சோகமாய் இருந்தால் சிரிக்க முயற்சிப்போம்.பிறர் சோகமாய் இருந்தால் சிரிக்க வைக்க முயற்சிப்போம்." (நான் எழுத பழகுகிறேன்,பிழை இருந்தால் சிரித்துவிட்டு சொல்லுங்கள்.நான் திருத்திகொள்கிறேன்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக